விஜய் பிறந்தநாளை ஒட்டி வைக்கப்பட்ட பேனரால் விபத்து.. உயிர் தப்பிய 10 வயது சிறுவன்..!
கள்ளக்குறிச்சி அருகே நடைபெறும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிறந்தநாள் பேனர் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர் காற்றில் சாய்ந்து விழுந்ததில் 10 வயது சிறுவன் சிக்கிக் கொண்டான்.
சின்ன சேலத்தில் விஜய் பிறந்தநாளை ஒட்டி அவரை வாழ்த்தி ரசிகர்கள் பேனர் வைத்திருந்தனர். கீழே விழுந்தது அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த 10 வயது சிறுவன் பேனர் கடையில் சிக்கிக்கொண்டான். அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஓடி சென்று பேனரை தூக்கி சிறுவனை மீட்டனர்.
பேனருக்கு கீழே இருசக்கர வாகனம் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்ததால் இந்த விபத்தில் சிறுவன் காயம் இன்றி உயிர் தப்பினான். அந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகின.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





