சவுக்கு ஷங்கருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்..!

ருத்துவ சிகிச்சை பெற ஏதுவாக சிறையில் இருந்து தற்காலிகமாக விடுதலை செய்ய தமிழக அரசுக்கு மனு அளிக்க சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு நீதிபதிகள் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அவர்கள் விசாரணைக்கு வந்த பொழுது மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தற்காலிகமாக சிறையில் இருந்து விடுவிக்குமாறு சவுக்கு சங்கர் தமிழக அரசுக்கு மனு அளிக்கலாம் என்று அறிவுறுத்தனர்.

 

மேலும் அதன் மீது சட்டத்திற்கு உட்பட்டு அரசு முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை கேட்டு ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.