தொண்டியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!

ரபாவில் குண்டு மழை பொழிந்து அப்பாவி மக்களை கொன்று குவித்த இஸ்ரேல் அரசை கண்டித்து தொண்டியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

பாலஸ்தீன  தெற்கு எல்லை பொதுமக்களுக்கு பாதுகாப்பு கேந்திரமாக அறிவிக்கப்பட்ட  ரபா பகுதியில் கூடாரங்களில் இரவில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் மீது குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் அரசை கண்டித்து, இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பாவோடி மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து இனப்படுகொலையில் ஈடுபடும் இஸ்ரேலுடனான தூதரக உறவை இந்தியா உடனடியாக துண்டித்துக் கொள்ள வேண்டும்.

 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநிலச் செயலாளர் செங்கோட்டை பைசல், மாவட்ட தலைவர் ரஹ்மான் அலி,உள்பட மாவட்ட, நகர நிர்வாகிகள் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் பொதுமக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.