பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் செயல்படுகிறது. இங்கு வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது சுமார் 1500 அடி ஆழத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டு சுரங்கம் முழுவதும் விஷவாயு வேகமாக பரவியது. இதனால் அங்கிருந்தவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்தனர். இதனால் சுரங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டது.