தாய் மற்றும் சகோதரர் கண் முன்னே சிறுமியை கொலை செய்த காதலன்..!

பேராவூரணியில் வீடு புகுந்து பெற்றோர் மற்றும் சகோதரரின் கண் முன்னால் பெண் ஒருவரின் தலையில் கல்லை போட்டுக் கொன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

மூன்று மாதங்களுக்கு முன் பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட காளீஸ்வரன் என்ற இளைஞர் ஓர் ஆண்டாக காதலித்த பெண்ணையும் தம்முடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததாகவும் திருமணமானவருடன் வர முடியாது என அந்த பெண் மறுத்ததால் மது போதையில் கொலை செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.