மகன் திருமணத்திற்காக பத்திரிக்கை வைக்க சென்ற போது விபத்து.. தாய் பலி..!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மகன் திருமணத்திற்கு பத்திரிக்கை வைப்பதற்காக சென்ற பெண் டாரஸ் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

 

ரயில்வே மேம்பாலம் வழியாக கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது பின்னால் வந்த டாரஸ் லாரி மோதி கீழே விழுந்தவர் மீது லாரி சக்கரம் ஏறியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.