கணவன் தெரியாமல் விட்ட வார்த்தை.. இரண்டு உயிர்கள் பலி..!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடும்பத்த தகராறு இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 2 வயது குழந்தை உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரகாசுக்கும் அவரது மனைவி கோமதிக்கும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. நேற்று கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கோமதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோமதியின் மகன் உயிர் இழந்த நிலையில் மகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.