ஜவான் படத்திற்கு முன்பே ஷாருக்கானுடன் நடிக்க மறுத்த நயன்தாரா..!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நயன்தாரா. முன்னணி ஹீரோக்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர் கூட்டம் இருக்கிறதோ அந்த அளவுக்கு இவருக்கும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

 

சமீபத்தில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் படத்தில் நயன்தாரா முக்கியமான ரோலில் நடித்திருப்பார். இந்நிலையில் நயன்தாராவுக்கு ஜவான் படத்துக்கு முன்பே சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தில் ஷாருக்கானோடு நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.

 

அந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலில் நடனமாட நயன்தாரா அழைத்துள்ளனர். ஆனால் சில காரணங்களால் இந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.