வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்..5 பேர் கைது..!

டமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். துறையூர் அடுத்த கண்ணனூரில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அறை எடுத்து தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர்.

 

மதிய வேளையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த பொழுது இவர்களது அறைக்குள் திடீர் என்று நுழைந்த 10 பேர் கொண்ட கும்பல் கட்டையாலும் ஆயுதங்களாலும் கொடூரமாக தாக்கியது. இதில் சுனில், நரேஷ், ராகுல், ராஜேஷ், மணி உள்ளிட்ட இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.

 

துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர்கள் தங்கள் யாருடனும் சண்டையிட வில்லை எனவும் இதுபோன்ற தாக்குதல் தொடர்ந்தால் மேலும் சொந்த ஊருக்கு செல்ல வேண்டியது தான் எனவும் வேதனையுடன் தெரிவித்தனர்.