அண்ணா குறித்து பேசுவதற்கு அண்ணாமலைக்கு தகுதியோ, தராதரமோ இல்லை!

ண்ணா குறித்து பேசுவதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எந்தத் தகுதியோ, தராதரமோ இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில், அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய சி.வி.சண்முகம், அண்ணா குறித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

 

அண்ணாவை பற்றி அண்ணாமலைக்கு என்ன தெரியும் என கேள்வி எழுப்பிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறக்கூடாது என திட்டமிட்டு, திமுகவுடன் கைகோர்த்துக் கொண்டு அண்ணாமலை செயல்பட்டு வருவதாக தோன்றுவதாகவும் தெரிவித்தார்.