ஹோட்டல் ஊழியர்களுக்கு தொற்றுநோய் இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம்..!

ஹோட்டல் ஊழியர்கள் தொற்றுநோய் இல்லை என்று சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் உணவு நச்சுத்தன்மைக்காக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 

இதனை அடுத்து கேரளா அரசு இன்று முதல் சுகாதார அட்டை திட்டத்தை அமல்படுத்த உள்ளது. இதன்படி கேரளாவில் உள்ள ஹோட்டல்கள் உணவகங்கள், சமையல் நிறுவனங்கள் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் தங்களுக்கு தொற்று நோய், வெட்டு காயங்கள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்க மருத்துவ சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.