சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி..!

திங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுருக்குமடிவலைகளை பயன்படுத்தி 12 மைல்களுக்கு அப்பால் மீன் பிடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 

ஆழ்கடலில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் இருதரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பை வாசித்தனர்.

 

அதில் நிபந்தனைகள் அடிப்படையில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.