அசீம் பிக்பாஸ் வெற்றிப்பெற்றது கமல்ஹாசனுக்கே பிடிக்கவில்லையா?

க்டோபர் 9ம் தேதி தொடங்கப்பட்ட பிக்பாஸ் 6வது சீசன் ஜனவரி 22ம் தேதி முடிவுக்கு வந்தது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் கடைசியில் இறுதி போட்டியாளர்களாக 3 பேர் இருந்தார்கள்.

 

விக்ரமன், ஷிவின் மற்றும் அசீம் இவர்களில் ஒருவர் வெற்றியாளர் என கூறப்பட ரசிகர்கள் அதிகம் விக்ரமன் தான் ஜெயிப்பார் என எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் மக்கள் அதிகம் எதிர்ப்பார்த்த விக்ரமன் 2ம் இடம் பிடிக்க அசீம் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

 

இதனால் BoycottVijayTv போன்ற டாக்குகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.மக்கள் பலரும் அசீம் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கமல்ஹாசனுக்கும் அசீம் வெற்றிப்பெற்றது பிடிக்கவில்லை.

 

அவர் சில காரணத்தால் தான் வெற்றியாளரை அறிவித்திருப்பார், இந்த புகைப்படம் அதனை வெளிப்படுத்துகிறது என ஒரு ரசிகர் கமெண்ட் போட்டிருக்கிறார். அந்த பதிவை உண்மை என கூறியுள்ளார் பிக்பாஸ் 6 போட்டியாளர் மகேஷ்வரி.