ஏற்கெனவே 3 பிள்ளைகளை பெற்றவரை திருமணம் செய்த நடிகை ஜெயபிரதா..!

மிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் நடித்து மக்களின் கனவுக் கன்னியாக ஒரு காலத்தில் இருந்தவர் தான் நடிகை ஜெயபிரதா.

 

30 ஆண்டு கால திரைப்பட தொழிலில் 300 திரைப்படங்களில் நடித்துள்ள ஜெயபிரதா 2004ம் ஆண்டு முதல் கிடைத்த படங்களில் நடிக்க தொடங்கினார். சினிமாவை தாண்டி அரசியலில் பெரிய ஈடுபாடு கொண்ட இவர் சென்னையில் ஜெயபிரதா என்ற பெயரில் ஒரு திரையரங்கை வைத்துள்ளார்.

 

1986ம் ஆண்டு தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் நகதாவை திருமணம் செய்துகொண்டார். இவர் ஏன்கெனவே சந்திராவை என்பவரை திருமணம் செய்து 3 குழந்தைகளை பெற்றவர்.

 

ஜெயபிரதாவின் இந்த திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம் நகதா தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே ஜெயபிரதாவை மறுமணம் செய்து கொண்டிருக்கிறார். ஜெயபிரதா மற்றும் நகதாவிற்கு ஒரு மகன் இருக்கிறார்.