சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டார் என்கிற பழமொழி யாருக்கு ஒத்து வருமோ, வராதோ இந்த சுரேஷ் சந்திராவுக்கு நூறு சதவிகிதம் ஒத்துவரும்.
யார் இந்த சுரேஷ் சந்திரா…
தன் பெயரிலேயே பெண் பெயரை இணைத்து வைத்திருக்கும் இவரின் காதல் சில்மிஷங்களுக்கும் அளவே இல்லை என்று சில டிவி தொகுப்பாளினிகள் கூறியிருப்பதை நம் காதில் கேட்க முடிந்தது .
இந்தப் பெயர் அவருடைய சொந்தப் பெயரே இல்லை என்று பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகரின் தம்பியும் தமிழில் சில படங்கள் நடித்த நடிகர் செல்வா ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார்.
சுரேஷ் சந்திரா நடத்தும் ‘டி ஒன’ என்ற கம்பெனி மூலம் இவர் நடத்தும் அலப்பறைகளுக்கு அளவே இல்லை.
பொதுவாக நடிகர் அஜித்தோட கொள்கையே ஒரு படத்தோட விளம்பரத்துக்கோ, ஒரு தொலைக்காட்சியில் பேட்டி அளிக்கவோ அவருக்கு சுத்தமா விருப்பமே இல்ல இது அவருடைய உண்மையான சுபாவம்.

நடிகர் அஜித் இந்த சுபாவம் உள்ளவர் தான் என்பதற்கு சாட்சியாக முன்னாள் தமிழக முதல்வராக இருந்த கலைஞர் அவர்களுக்கு தமிழ் திரை உலகம் இணைந்து நடத்திய ஒரு பாராட்டு விழாவில் அஜித் மேடை ஏறி தைரியமாக எங்களை இங்கு வரவழைக்க மிரட்டி இருக்கிறார்கள் என்று கூற அதற்காக அவர் பட்ட வேதனையும் வலியும் அப்போது சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அவருக்காக வரிந்து கட்டி அந்த பிரச்சனைகளை சரி செய்து வைத்துள்ளது அனைவரும் அறிந்ததே.
இப்பேற்பட்ட குணம் கொண்ட நடிகர் அஜித் கொரோனா வந்த காலகட்டத்தில் கூட பத்திரிகையாளர்கள் நலனில் தலையிட்டு அனைவருக்கும் பணத்தை வாரி வழங்கியுள்ளார் தல அஜித்.
மேலும் அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் பத்திரிகையாளர்களுக்கு தரும் விளம்பரத்தில் அஜித் தலையிடுவதே இல்லை . ஆனால் அவரின் மேனேஜர் , பிஆர்ஓ என்று சொல்லப்படும் சுரேஷ் சந்திராவை அணுகினால் அஜித் சார் 20 ,25 பேர் மட்டுமே லிஸ்ட் கொடுத்துள்ளார்.
இல்லையென்றால் தயாரிப்பாளர் இவர்களுக்கு மட்டும் தான் கொடுக்க சொன்னார் என்றும் கூறுவார். அதை மீறி நாம் கேட்டால்,
நீங்கள் போய் என்னுடைய உதவியாளரை போய் பாருங்கள் என்பார்.

எப்பொழுதும் பாதி மதியில் சுற்றுபவர் போல இருப்பார் ஆனால் உண்மையில் பலே கில்லாடி இந்த அப்துல் நாசர்.
இவருக்கு யாரு உண்மை விசுவாசிகளோ அவரை மட்டுமே முதலில் மதிப்பவர். அன்று உதவியாளர் இன்று மக்கள் தொடர்பாளர் என்ற அடையாள அட்டை வேற உருப்படுமா இனி.
கள்ளனை நம்பி குள்ளன் கெட்ட கதை தான்?
இரண்டு மூன்று தடவை தொடர்ந்து கேட்டால் படத்தை தயாரிக்க வடநாட்டில் இருந்து இங்கே வந்திருக்கும் போனிகபூரின் கம்பெனியில் ஒருவர் பெயரைச் சொல்லி அவரை போய் கேளுங்கள் என்று கூறுகிறார்.
சரி என்று அவருக்கு போன் செய்தால் அவர் போனையே எடுப்பதில்லை.
ஒரு படத்தின் விளம்பரத்திற்காக எவ்வளவோ கஷ்டப்படும் பத்திரிகையாளர்களுக்கு இவர் தரும் கஷ்டங்கள் கொஞ்சம், நஞ்சமல்ல.
பத்திரிகையாளர்களில் மூத்தவர்கள் யார், இளையவர்கள் யார் என்ற வேறுபாடு கூட தெரியாமல் அவரின் அந்தரங்க லீலைகள் தெரிந்தவர்களுக்கும், அவரைப் பற்றி தவறான செய்திகள் வெளியிட்டு இவரை மிரட்டும் நபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பது பிஆர்ஓ சுரேஷ் சந்திராவின் வழக்கம்.
தற்போது கூட ‘துணிவு’ படத்தின் விநியோக உரிமையை வாங்கி இருக்கும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் நடிகர் அஜித்தை படத்தின் விளம்பரத்திற்காக இசை வெளியீட்டு விழாவிற்காக அவரை வர வைக்கலாம் என்று எண்ணிய பொழுது உடனடியாக அஜித்தை வைத்து நல்ல படங்களுக்கு எப்பொழுதும் விளம்பரங்கள் தேவையில்லை என்று சொல்ல வைத்தது இந்த சுரேஷ் சந்திரா தான்.
ஒன்று யாருக்கும் இந்த மாதிரி விளம்பரங்கள் கொடுக்காமல் இருந்திருக்க வேண்டும். அல்லது கொடுத்து இருந்தால் அனைவருக்கும் தந்திருக்க வேண்டும் அங்கே போய் கேளு, இங்க போய் கேளு என்று பத்திரிகையாளர்களை அல்லல் படுத்துவதில் பலே கில்லாடி இந்த சுரேஷ் சந்திரா.
இது ‘துணிவு’ திரைப்படத்திற்கு மட்டுமல்ல அஜித்தின் அனைத்து படங்களுக்குமே இது தொடர்கிறது. சுரேஷ் சந்திரா நடத்தும் டி ஒன் என்ற கம்பெனி பணியாற்றும் அனைத்து படங்களுக்குமே இதே நிலை தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றது.