எட்டாம் வகுப்பு மாணவர்களின் ஸ்கூல் பேக்கில் ஆணுறை..!

ர்நாடக மாநிலம் பெங்களூருவில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் பேக்கை சோதனையிட்ட பொழுது அதில் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள் மற்றும் சிகரெட் உள்ளிட்டவைகள் இருந்ததால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

கர்நாடக மாநிலத்தின் சில பள்ளிகளில் வகுப்பறைகளில் மாணவர்கள் செல்போன் கொண்டு வருவதாக புகார் இருந்தது. இதனையடுத்து மாணவர்களின் பெயர்களை ஆசிரியர்கள் சோதனை செய்தனர்.

 

அப்பொழுது மாணவர்களின் பைகளில் செல்போன்களைத் தவிர ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள், சிகரெட், லைட்டர் ஆகியவை இருந்துள்ளன. இதனைக் கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.