சுவாமியே சரணம் ஐயப்பா.. சரண கோஷத்துடன் இன்று மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்..

கார்த்திகை முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக மாலை அணிந்து விரதத்தை துவங்கினர்.

 

பரிமலை ஐயப்பனுக்கு மாலை போடும் பக்தர்கள் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் தை மாத ஒன்றாம் தேதி மகர ஜோதி தரிசனம் காணும் வரை கடுமையாக விரதம் கடைபிடிப்பார்கள். அதன்படி கார்த்திகை முதல் நாளான இன்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். அதேபோல, திருப்பூர் காலேஜ் ரோட்டில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, தமிழக முழுவதும் உள்ள ஐயப்பன் கோவில்களில் பக்தர்கள் குருசாமி தலைமையில், மாலை அணிந்து விரதத்தை ஆரம்பித்தனர்.