குழந்தை திருமணம் நடத்தி வைத்த தீட்சிதர் கைது..!

டலூரில் குழந்தை திருமணம் நடத்தி வைத்ததாக சிதம்பரம் நடராஜர் ஆலய தீட்சிதர் கைது செய்யப்பட்டார். சிதம்பரம் வடக்கு வீதியை சேர்ந்த தீட்சதர் தனது 14 வயது மகளுக்கு கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 24 வயது தீட்சிதருக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

 

இது குறித்த புகாரின் பேரில் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் தொடர்ந்து அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர் .குழந்தை திருமணம் நடைபெற்றது உறுதியானதை அடுத்து வழக்குப்பதிந்து தீட்சிதரை கைது செய்த போலீஸார் தலைமறைவான மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.