கடலில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர் உயிரிழப்பு..!

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடலில் நண்பர்களுடன் குளித்த பாலிடெக்னிக் மாணவர் முகமது என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் காசிமேடு துறைமுகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

இதையடுத்து ராயபுரம் தீயணைப்புத்துறையினர் மாணவரின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.