ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..!

மிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்ட இருபத்தி ஒரு சட்டமும் வடிவங்களுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்குமாறு ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் வலியுறுத்தினார். சென்னை கிண்டி ராஜ்பவனின் ஆளுநரை முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்தார்.

 

அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பின் பொழுது மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ள நிலையில் தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட முன் வடிவுக்கு ஒப்புதல் வழங்குமாறு முதல்வர் கேட்டுக் கொண்டார்.

 

கூட்டுறவு சங்கங்கள் திறந்து சட்ட முன்வடிவு தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமை சட்ட முன்வடிவு, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்ட முன்வடிவு உள்ளிட்ட 21 சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டது.