கேரளாவில் மீண்டும் பரவும் பறவைக் காய்ச்சல்..!

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி 12 வயது சிறுமி உயிரிழந்தது உறவினர்கள், நண்பர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவுவதாக குடும்ப நலத் துறையினருக்கு தெரியவந்ததையடுத்து மாநில குடும்ப நலத் துறையினர், காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள், இரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

 

இந்த நிலையில் கோழிக்கோடுடு பகுதியை சேர்ந்த 12 வயதான சிறுவர்களுக்கு லேசான காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் வரும் முன்பு சிறுமியை உடல்நிலை மோசமானது.

 

உடனே அவர் கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவ பலனின்றி இரட்டை சகோதரிகளில் ஒரு சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவம் பெற்று வருகிறார். சிறுமி உயிரிழந்த பின்னர் தான் அவரது ரத்த மாதிரி ஆய்வு முடிவுகள் வந்தது. அதில் அவருக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.