இந்தியாவில் 16 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை..!

வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 16 லட்சத்துக்கும் அதிகமான இந்தியாபயனர்களின் கணக்குகளை தடை செய்துள்ளதாக அந்த நிறுவனத்தின் மாதாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள அறிக்கையில் வாட்ஸ்அப் பயனர்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் நிறுவனர் பல கணக்குகளை தடை செய்துள்ளனர் எனவும் அதை போல வாட்ஸ்அப் தீங்கு விளைவிக்கும் செயல் பாட்டை தடுப்பதற்காக 16.64 லட்சம் கணக்குகளை தடை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

தாங்கள் குற்றங்களை தடுப்பதில் கவனம் செலுத்துகிறோம். ஏனெனில் குற்றம் ஏற்பட்ட பிறகு அதைக் கண்டு கொள்வதைவிட தீங்கு விளைவிக்கும் செயலை முதலில் தடுப்பது மிகவும் சிறந்தது என குறிப்பிட்டுள்ளது.