கோர்ட் உத்தரவுப்படி நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு ..!

ஜெய் பீம் திரைப்படம் விவகாரத்தில் நடிகர் சூர்யா இயக்குனர் ஞானவேல் மீது வேளச்சேரி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்னியர் சேவா என்ற அமைப்பின் தலைவரான சந்தோஷ் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

 

ஓடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம் படத்தில் குறிப்பிட்ட சமூக மக்களை இழிவுபடுத்தும் காட்சிகள் அமைந்து இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கக்கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த 29ஆம் தேதி வழக்கு பதிவு செய்த நீதிமன்றம் துணை இயக்குனர் நடிகர் சூர்யா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.