ஆதி – நிக்கி கல்ராணி கோலாகல திருமணம்..!

டிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் மரகத நாணயம் படத்தில் ஒன்றாக நடித்தபோது பழக்கம் ஏற்பட்டு அதன் பின் காதலிக்க தொடங்கினார்கள். பெற்றோர் சம்மதத்துடன் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் 24ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இன்று 2022, மே18ம் தேதி அவர்கள் திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது.

 

திருமணத்திற்கு முன்பு நடந்த ஹல்தி விழாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வெளிவந்து இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

 

அதில் வேதாளம் படத்தில் வரும் ஆளுமா டோலுமா பாடலுக்கு ஆதி மற்றும் நிக்கி நடனம் ஆடி இருக்கின்றனர்.