நியாயவிலை கடைகளில் தரமான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வேண்டும்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


நியாயவிலை கடைகளில் தரமான அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

 

இதில் தமிழக மக்களுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் உரிய காலத்தில் விவசாயக் கடன், நகை கடன் வழங்குதல் மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பெரியசாமி சக்கரபாணி தலைமை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Leave a Reply