உரிமையாளர் மீதுள்ள அன்பால் ஆம்புலன்ஸ் பின்னே மருத்துவமனை வரை ஓடிய நாய்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


துருக்கியில் உரிமையாளர் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்படுவதை அறிந்த நாய் அந்த வாகனம் பின்னே மருத்துவமனை வரை ஓடிய வீடியோ வைரலாகி வருகிறது. இஸ்தான்புல் நகரில் வசித்த பெண் ஒருவர் நாயை வளர்த்து வருகிறார்.

 

அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனையறிந்த நாய் உரிமையாளர் மீதான அன்பால் ஆம்புலன்ஸ் பின்னே பல கிலோமீட்டர் ஓடியது.

 

மருத்துவமனை வரை ஓடிய அந்த நாய் மருத்துவமனை வாசலிலேயே காத்துக் கிடந்த காட்சி காண்போரை நிகழ்ச்சிகளை செய்தது.


Leave a Reply