சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 14-வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

 

மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.

 

இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.

 

இதன் மூலம் சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


Leave a Reply