சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


விசு பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைகளை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

 

வருகிற 14-ஆம் தேதி இந்த பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் நடைபெறும். இதை தொடர்ந்து 18 ஆம் தேதி வரை சித்திரை மாத சிறப்பு பூஜைகள் நடைபெற்று அன்றைய தினம் இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும். கொரொனா பரவலை கட்டுப்படுத்த ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

 

மேலும் இன்று முதல் 18ஆம் தேதி வரை தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அனைத்து பக்தர்களுக்கும் ஆர்‌டி‌பி‌சி‌ஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


Leave a Reply