இந்தியாவில் கொரொனா வைரஸ் தொற்று நோய் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பயங்கரமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது தமிழகத்திலும் மகாராஷ்டிராவிலும் தான். இப்படியே கொரொனா வைரஸ் பரவி கொண்டிருந்தால் தடுத்து நிறுத்துவது எப்படி என்ற கேள்விகள் எழுகிறது.
அந்த வகையில் இந்தியாவில் கொரொனா தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. கோவாக்ஸின் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்திப் பார்க்கும் முதல் இரு கட்ட சோதனைகளை விரைவுபடுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடவடிக்கை எடுத்தது. இதற்காக சென்னை மருத்துவக் கல்லூரி உட்பட 12 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஹரியானா மாநிலம் – அங்கு கோவாக்ஸின் தடுப்பூசியை தங்கள் உடலில் செலுத்தி கொள்ள விரும்பும் தன்னார்வலர்கள் பதிவு 10 நாட்களாக நடந்தது. இதில் சுமார் 100 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 22 பேரின் மருத்துவ வரலாறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அவர்களில் 8 பேர் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
குறிப்பாக அவர்கள் வைரசால் முன்னர் பாதிக்கப்பட்டுள்ளார்களா, கல்லீரல், நுரையீரல், சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாரா என்பதையெல்லாம் ஆராய்ந்து மூன்று பேரை தேர்வு செய்து இருந்தார்கள். அந்த மூன்று பேருக்கும் தடுப்பூசி வெற்றிகரமாக போடப்பட்டு தடுப்பூசி போடும் சோதனை தொடங்கியுள்ளது. இதை ஹரியானா மாநில சுகாதாரத்துறை மந்திரி ட்விட்டரில் அறிவித்திருந்தார்.