48 நாட்களுக்கு பிறகு ரயில் சேவை இயக்கம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் முதல்கட்டமாக இயக்கப்படும் 15 ரயில்கள் சென்னை, பெங்களூரு,செகந்தராபாத், திருவனந்தபுரம், மும்பை நகரங்களுக்கு செல்லும். இதுதவிர திப்ருகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வர், அகமதாபாத், ஜம்மு, தாவி மற்றும் கோவா ஆகிய நகரங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

 

இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை திங்கட்கிழமை மாலை 4 மணி முதல் துவங்கும். ஐஆர்சிடிசி இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்யப்படும் என்றும் பயணிகள் கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படாது என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ள ரயில்வேத்துறை முன்பதிவு டிக்கட் இருப்பவர்கள் மட்டுமே ரயில் நிலையங்களுக்கும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.

 

கொரொனா வைரஸ் தொற்று இல்லை என்பதை உறுதி செய்வதுடன் பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் ரயில்வேத்துறை அறிவித்துள்ளது. முக்கிய நிறுத்தங்களில் மட்டுமே இந்த சிறப்பு ரயில்கள் நிற்கும். ராஜானி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மீண்டும் ரயில் ஓடும் என்ற மத்திய அரசின் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படிப்படியாக பயணிகள் சேவையை விரைவில் துவக்க ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளது. கொரொனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் 25-ஆம் தேதி ரத்து செய்யப்பட்ட ரயில் சேவை 48 நாட்களுக்கு பிறகு மீண்டும் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply