விசாகப்பட்டினம் நச்சு வாயு கசிந்தது எப்படி?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன தொழிற்சாலையில் நச்சு வாயுகசிவு ஏற்பட்டது எப்படி என்பது தொடர்பாக பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. நச்சு வாயு கசிந்து எல்ஜி பாலிமஸ் தொழிற்சாலை, ஃப்ரிட்ஜில் பயன்படும் குளிர்விப்பான், தெர்மாகோல் உள்ளிட்டவற்றை தயாரிக்கிறது.

 

1961 ஆம் ஆண்டில் ஹிந்துஸ்தான் பாலிமஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்ட ஆலை பல்வேறு மாற்றங்களுக்கு பிறகு தென் கொரியாவின் எல்ஜி நிறுவனத்தின் கைகளுக்கு 1997 ஆம் ஆண்டு வந்தது. அந்த நிறுவனம் அளித்திருக்கும் தகவலின்படி ஆயிரத்து 800 டன் அளவுக்கு ஸ்டைரின் வாயு திரவ நிலையில் டேங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.

 

பொது முடக்கத்தின் போது 40 நாட்களாக செயல்படவில்லை தளர்வு அறிவிக்கப்பட்டு ஆலை செயல்பட அனுமதி கிடைத்ததும் பணியாளர்கள் முதற்கட்ட பராமரிப்பு பணியை மேற்கொண்டு இயந்திரங்களை இயக்குவதற்கு முயற்சி செய்துள்ளார்கள். நீண்ட நாட்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் வெப்ப நிலை மாற்றத்தாலும் ஸ்டைரின் இருந்த டேங்குகளில் தாமாகவே சில வேதி வினைகள் நடந்திருக்கின்றன.

 

இதனால் திரவ நிலையில் இருந்த ஸ்டைரின் ஆவி ஆகி கசிந்து புகை போக்கி வழியாக வாயுவாக வெளியேறியுள்ளது. ஸ்டைரின் என்பதை உணர்ந்து எச்சரிக்கை ஒலி எழுப்பும் வகையிலான சைரன்கள் ஆலையில் இருக்கின்றன. வெளியான வாயு வேதி மாற்றம் அடைந்ததால் செயல்படவில்லை என்று கூறப்படுகிறது.

 

வேதிவினைக்கு உள்ளான சமநிலைப்படுத்துவது போதுமான ரசாயனங்களும் அளவில் கையிருப்பில் இல்லை. ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே கசிவு ஏற்பட்டாலும் வெளியான வாயு காற்றில் பரவி மக்களை பாதித்துள்ளது. உடலுக்குள் சென்ற வாயு நுரையை உருவாக்கி உயிரை பறித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எல்ஜி பாலிமஸ் போல ஏராளமான ஆலைகள் செயல்களை பயன்படுத்துகின்றன. அவையும் பல நாட்களுக்கு பிறகு திறக்கப்பட உள்ளன. அவற்றின் பாதுகாப்பு இப்போது கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.


Leave a Reply