வீர மரணம் அடைந்த கணவரின் சவப்பெட்டியை கண்ணீருடன் பார்க்கும் மனைவி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் அனுஜ் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை அவரது மனைவி கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்த புகைப்படம் காண்போரை உலுக்குவதாக உள்ளது.

 

ஹந்த்வாராவில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த கிராம மக்களை மீட்க சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் அனுஜ் மற்றும் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டனர். அன்றிருந்த கொண்டுவரப்பட்ட அனுஜின் உடல் சண்டிகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலி செலுத்தப்பட்ட பின் இறுதி சடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட தயாராக வைக்கப் பட்டிருந்தது.

இந்நிலையில் திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் கணவர் தன்னை நீங்கா துயரில் ஆழ்த்தி விட்டு சென்றதை நினைத்து சவப்பெட்டி அருகே மனைவி அக்ருதி கண்ணீருடன் சடலத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தார். அந்த படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Leave a Reply