குச்சிகளைப் பயன்படுத்தி மாலை மாற்றிக்கொண்ட திருமணத் தம்பதிகள்

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


மும்பையில் குச்சிகளைப் பயன்படுத்தி மாலை மாற்றிக்கொண்டு வித்தியாசமான திருமணம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் முன்னதாக நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் எளிமையாக நடைபெற்று வருகின்றன. இதில் சில விநோதங்களும் அவ்வப்போது அரங்கேறுகின்றன.

 

இந்த நிலையில் மும்பையில் ஒரு திருமணம் வித்தியாசமான முறையில் நடந்துள்ளது. சமூக இடைவெளியை வலியுறுத்தும் நோக்கில், திருமணத் தம்பதிகள் திருமணத்தின் போது குச்சிகளைப் பயன்படுத்தி மாலைகளை மாற்றிக்கொள்கிறார்கள்.

 

திருமணத்தில் கலந்துகொண்ட ஒருவர் இதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது ட்விட்டரில் இந்த விடியோ வைரலாக பரவி வருகிறது.


Leave a Reply