ராமநாதபுரம் மாவட்டத்தில், இருளில் மூழ்கி கிடக்கும் குஞ்சங்குளம் பஞ்சாயத்து கிராமங்கள்! கொஞ்சம் கூட வேலைக்கு ஆகாத ஊராட்சி நிர்வாகம்!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : ஆனந்தகுமார்


ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், தெருவிளக்குகள், சாலையோர மின்கம்பத்தில் உள்ள விளக்குகள் கடந்த மூன்று தினங்களாக எரியாமல் உள்ளன.

 

இதனால், இரவு நேரத்தில் , பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, பழுதான மின்விளக்குகளை உடனடியாக மாற்ற வேண்டுமென, அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாடாைனை ஒன்றியத்துக்குட்பட்ட பல ஊராட்சி பகுதிகளில், குறிப்பாக குஞ்சான்குளம் ஊராட்சி பகுதியில் உள்ள கீழக்கோட்டை, சீந்திவயல், திணைக்காத்தான் வயல் உள்ளிட்ட பகுதிகளில் தெருவிளக்குகள் எரியாமல், மின்கம்பங்கள் வெறும் காட்சிப்பொருளாகவே உள்ளன. சாலையோர விளக்குகளின் நிலையும் இதுதான். இதனால், இருள் சூழ்ந்து காணப்படுவதால், இரவு நேரத்தில் கிராமத்திற்குள் செல்வதற்குள் பொதுமக்கள் படாதபாடுபடுகின்றனர்.

 

மேலும் சில பகுதிகளில் குண்டும் குழியுமாக உள்ள ரோட்டில், வாகனத்தில் செல்வோர், விபத்தில் சிக்குகின்றனர்.

தரமற்ற விளக்குகளை பயன்படுத்துவதால், அவை அடுத்த ஒரு சில நாட்களிலேயே எரியாமல் போய்விடுகின்றன. எனவே கிராம பகுதிகளில் பழுதடைந்த தெருவிளக்குகள் மற்றும் சாலையோர மின்கம்பத்தில் உள்ள விளக்குகளை கணக்கெடுத்து, அவற்றை உடனடியாக மாற்ற, ஊராட்சி நிர்வாகம், மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என. பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply