கல்யாணத்திற்கு பின்னரும் முன்னாள் காதலுடன் நீடித்த தொடர்பு…! சகோதரன் கொலை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி கலியபெருமாள் வீதியை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி கவுசல்யா. கடந்த வருடம் இருவருக்கும் திருமணம் நடந்த நிலையில் கௌசல்யா திருமணத்திற்கு முன்பு காதலித்து வந்த ராமச்சந்திரன் என்பவருடன் தொடர்ந்து பழக்கத்தில் இருந்து வந்துள்ளார். இதையறிந்த கணவர் கோபி கௌசல்யாவின் சகோதரர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

இதையடுத்து தனது சகோதரியின் வாழ்க்கை வீணாய் போய் விடக்கூடாது என்று ராமச்சந்திரனை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். ராமச்சந்திரன் தனது ஆதரவாளர்களான ரவிச்சந்திரன், பூவராகவன், மனோஜ் ஆகியோரை அழைத்து சென்றுள்ளான். பேச்சுவார்த்தையின்போது கௌசல்யாவின் சகோதரர்களும், கணவர் கோபியும் காதலை கைவிட ராமச்சந்திரனை வற்புறுத்தியுள்ளனர்.

ஆனால் கௌசல்யாவை சந்தித்தது முதல் காதல் கொண்டது வரை தான் சீனியர் என்பதால் காதலை கைவிட மறுத்து வாக்குவாதம் செய்துள்ளார் ராமச்சந்திரன். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்ட நிலையில் ராமச்சந்திரன் ஆதரவாளர்களுடன் காதலியின் சகோதரரையும், கணவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்றான்.

 

அவர்கள் பதிலுக்கு கத்தியால் தாக்கியதில் காதலன் ராமச்சந்திரன் மற்றும் மனோஜின் மண்டை உடைந்தது கத்தி குத்தில் காயம் அடைந்த கவுதம் மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாபமாக பலியானார்.
கௌசல்யாவின் கணவர் கோபி பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தப்பியோடிய ரவிச்சந்திரன், பூவராகவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருமணத்திற்குப் பின்னரும் கவுசல்யா தனது விபரீத பருவக் காதலை தொடர்ந்ததால் காதலின் சீனியர் என்று சட்டம் பேசிய முன்னாள் காதலன் ராமச்சந்திரன் மண்டை உடைந்து மருத்துவமனையில் படுத்திருக்க தாலி கட்டிய கணவன் கத்திக்குத்து காயத்துடன் உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

 

தங்கையின் வாழ்வுக்காக சகோதரர் தன்னுடைய உயிரையே விலையாக கொடுக்கும் விபரீதம் அரங்கேறியுள்ளது. திருமணத்திற்குப் பின்னர் கணவன் இருக்க சம்பந்தப்பட்ட பெண் வேறு நபரை காதலித்தால் குடும்பத்தில் என்ன மாதிரியான விபரீதங்கள் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.


Leave a Reply