கொரோனா மருந்து சோதனை நிறுத்தம்… காரணம் என்ன?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சீனாவில் கொரொனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் பல்வேறு மருந்துகளை கொடுத்து ஆராய்ச்சி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. முதன் முதலில் பரவியது சீனாவில் தான். 77,000 பேர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விட்டதால் இப்போது ஆயிரத்து 58 பேர் தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கொரொனா தொடர்பாக மொத்தம் 598 மருத்துவ சோதனைகள் நடைபெற்று வந்த நிலையில் போதிய நோயாளிகள் இல்லாததால் இவற்றில் 40 சோதனைகள் நிறுத்தப்பட்டன.

 

அமெரிக்காவிற்கு சென்று நிறுவனம் தயாரித்த மருந்தை தீவிர அறிகுறி உள்ளவர்களுக்கு கொடுத்து சோதனை செய்வதும் நிறுத்தப்பட்டுள்ளது. மருந்தைக் கொடுத்து சோதித்து பார்க்க வாய்ப்பில்லை என சீன அரசுக்கு ஆலோசனை கூறும் மருத்துவ வல்லுநர் குழுவின் தலைவரான ஜோங்க் நான்சன் தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவில் கொரொனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டங்கள் 47 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் 13.85 விகித விழுக்காடாக உள்ளது. அதேபோன்று கொரொனா பாதிப்பை விகிதம் 3.3 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரொனா இறப்பு விகிதம் 1.1 என தெரிவிக்கபட்டுள்ளது.

 

நாடு முழுவதும் 350 மாவட்டங்களில் நோய் தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட 47 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரொனா நோய் தொற்று ஏற்பட வில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த 47 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கொரொனா பாதிப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது.


Leave a Reply