கரூரில் கொரோனாவால் உயிரிழந்த முதியவரின் உடலை புதைக்க எதிர்ப்பு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கரூர் அரசு மருத்துவமனையில் கொரொனா பாதிப்பால் உயிரிழந்த முதியவரின் உடலை அங்கு உள்ள மயானத்தில் புதைக்கக் கூடாது எனக்கூறி சாலையில் தடுப்புகளை போட்டு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

அரசு தலைமை மருத்துவமனையில் திண்டுக்கல், கரூர், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த 135 பேர் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் திண்டுக்கல்லை சேர்ந்த 96 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

அவரை பாலம்மாள் புறம் மயானத்தில் புதைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் அதனை அறிந்த அப்பகுதி வாசிகள் சாலையில் இரும்பு, மரக் கட்டைகளை போட்டு போக்குவரத்தை தடை செய்தனர். தகவலறிந்து வந்த போலீசார் உடலை புதைப்பதால் கொரொனா வராது என்பதை விளக்கிக் கூறிய பின் தடுப்புகளை அகற்றிவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.


Leave a Reply