ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் தயாரிப்பில் இந்தியா முதலிடம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் நிர்பந்தித்து கேட்கும் அளவிற்கு முக்கியமான ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மாத்திரைகள் இந்தியாவில் எந்த அளவிற்கு தயாரிக்கப்படுகின்றன? ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் கடந்த சில நாட்களாக அடிக்கடி உச்சரிக்கப்படும் மாத்திரையின் பெயர்.

 

அதற்கு இரண்டு காரணங்கள் ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் கொரொனாவிற்கு தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனமும் மேலும் சில நாடுகளும் பரிந்துரைத்தது முதல் காரணம். கொரொனாவை கட்டுப்படுத்துவதில் ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் கேம் சேஞ்சர் ஆக இருக்கும் என்று கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவை நிர்பந்தித்து மாத்திரை ஏற்றுமதிக்கு அனுமதி அளித்தது இரண்டாவது காரணம்.

 

ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மாத்திரை மலேரியா மற்றும் முடக்கு வாதத்திற்கு மருந்தாக பயன்படுகிறது. ஒரு மாதத்துக்கு 40,000 மாத்திரைகளை தயாரிக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது. உலகில் தயாரிக்கப்படும் மொத்த ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் 70% இந்தியாவில் உற்பத்தியாகிறது. நான்கு பெரும் நிறுவனங்கள் ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் தயாரிப்பில் முன்னணியில் உள்ளன.

 

200mg, 400mg என இரண்டு அளவுகளில் ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 500 அட்டைகள் ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் விற்பனையாகும் என்று கூறுகின்றனர். மருந்து விற்பனையாளர்கள் ஒரு அட்டையில் 10 அல்லது 15 ஆக்ஸிகுளோரைடு மாத்திரைகள் இருக்கும் 200mg அளவு கொண்ட 10,000 மாத்திரைகளின் விலை 65 ரூபாய்.

 

400mg அளவுகொண்ட பத்து ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மாத்திரைகளின் உத்தேச விலை 175 ரூபாய். மருத்துவரின் பரிந்துரையின்றி ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மாத்திரையை உட்கொள்ள கூடாது என இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.


Leave a Reply