கொரோனா பற்றிய அச்சமில்லையா? ராமநாதபுரம் பகுதியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்படும் மீன் கடைகள், அம்மா உணவகங்கள்!!

Publish by: கே.மகேந்திரன் --- Photo :


நாடு முழுவதும் கொரானா வைரஸ் பரவாமலிருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களின் நலனுக்காக அத்தியாவசிய பொருட்கள் வாங்க குறிப்பிட்ட நேரத்தில் கடைகளை திறந்து விற்பனைக்கு பின் மூட அரசு அறிவித்துள்ளது. கடைகளில் கூட்டம் சேராமல் சமூக இடைவெளி அவசியம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

 

இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழழை என்பதால் அசைவ உணவுப் பிரியர்கள் ராமநாதபுரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மீன் மார்க்கெட்களில் திரண்டனர். நுழைவு வாயிலில் போலீசார் தடுப்பு அமைத்து ஒரு மீட்டர் முதல் இரண்டு மீட்டர் சமூக இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்தினர்.

ஆனால் மார்க்கெட்டிற்குள் நுழைந்த மக்களோ எவ்வித இடைவெளியையும் கடைபிடிக்காமல் வழக்கம் போல் முண்டியடித்தனர். இவர்களின் ஆர்வத்தை அறிந்த வியாபாரிகளும் மீன்களின் விலையை இரு மடங்காக உயர்த்தி விற்கத் துவங்கினர். இப்படி மக்கள் திரண்டதால் மார்க்கெட் பகுதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டது.

 

இதேபோல், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகம், சின்னக்கடை, பாரதி நகர் மீன் மார்க்கெட்டிலும் இடைவெளி கடைபிடிக்காத நிலை தொடர்ந்தது. அரசு பல முறை அறிவுறுத்தியும் பொதுமக்களிடம் கொரானா வைரஸ் பரவுமே என்ற பயம் துளியும் இல்லாது கும்பல், கும்பலாக கூடுவது அச்சத்தை அதிகரிக்கவே செய்கிறது.


Leave a Reply