ஊரடங்கை மீறினால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவீர்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கு உத்தரவை மீறினால்14 நாட்கள் தனிமை காவலில் இருக்க நேரிடும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரொனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும்21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

மக்கள் கடந்த 5 நாட்களாக வீட்டிலேயே முடங்கி இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆன நேற்று பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. கொரொனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மக்கள் முழுமையாக பின்பற்றுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

மேலும் பிற மாநில தொழிலாளர்கள், மாணவர்களை விடுதியிலிருந்து வெளியேற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது . இடம்பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்து நிறுவனங்கள் பாதுகாக்க வேண்டும் என்றும் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றுபவர்கள் அரசு மருத்துவமனைகள் 14 நாட்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


Leave a Reply