கொரொனா வைரஸ் உருவான விதம் குறித்து அமெரிக்க விஞ்ஞானி தகவல்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் இருந்து உருவானது அல்ல என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து சீனா மீது அமெரிக்கா சந்தேகம் எழுப்பி வரும் சூழலில் அந்நாட்டின் விஞ்ஞானிகளின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கொரொனா வைரஸ் உலகம் முழுவதும் பல்லாயிரம் உயிர்களைப் பறித்துக் கொண்டு உள்ளது.

 

இந்த வைரஸ் சீனாவில் உள்ள நகர சந்தையில் உருவானதாக கூறப்பட்டு வரும் நிலையில் இது இயற்கையாக உருவானதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள துலானி மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ராபர்ட் முகாமில் கொரொனா உருவானதாக கூறுவது தவறானது என்றார்.

 

கொரொனா வைரஸின் மேற்புறத்தில் ஏற்பட்ட பிறல்வு கொரொனா வைரஸ் உருவாக காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ள அவர் பல ஆண்டுகளாக மனித குலத்தின் இந்த வகை வைரஸ் நோய்களை உருவாக்கி வருவதாக கூறுகிறார். ராபர்ட் உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழு கொரொனா வைரஸ் தோற்றம் குறித்து மேற்கொண்ட ஆய்வு விவரங்களை இதழில் வெளியிட்டுள்ளது.

 

இதன் படி கொரொனாவின் இரண்டு முக்கிய அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் வெளியே கதிர் போல நீட்டிக் கொண்டிருக்கும் புரதம் மனிதர்களை தொற்றிக் கொண்டு உள்ளே ஊடுருவ பயன்படுவதாக கூறியுள்ளனர். இந்த கொரொனா வடிவம் செயற்கையாக உருவாக வாய்ப்பில்லை என்றும், இயற்கையாகவே உருவாகியதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

 

புதிய வைரசை உருவாக்க வேண்டுமானால் நோய் உண்டாக்கும் வகையில் ஒரு மூலக்கூறு வடிவத்தை உருவாக்க வேண்டும். ஆனால் கொரொனாவின் வடிவமும், மூலக்கூறு அமைப்பும் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது போல தோன்றவில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

 

வௌவால், எறும்புதின்னி போன்ற விலங்குகளிலிருந்து உருவாக்கி அதன் பின்னர் அதில் ஏற்பட்ட மாற்றம் மனிதர்களிடம் தொற்றி பரவி இருக்கலாம் என்கிறார் அமெரிக்காவின் தேசிய சுகாதார துறை இயக்குனர் டாக்டர் பிரான்சிஸ்.

 

சார்ஸ் , மெஸ் போன்ற வைரஸ்கள் இந்த விதமே உருவானதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். கொரொனா வைரசும் விலங்கிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்றி மனிதர்களுக்கு நோய் உண்டாக்கும் விதத்தில் பரிமாண வளர்ச்சி அடைந்து இருக்கக்கூடும் என்ற கருத்துருவம் விஞ்ஞானிகளிடம் உள்ளது.


Leave a Reply