கிருமி நாசினி தெளிக்க பிரத்யேக சிறிய ரக விமானம்…!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பொள்ளாச்சியில் சிறியரக விமானம் மூலம் மருந்து தெளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றுள்ளது. ஞானபிரகாசம் கண்டுபிடித்துள்ள சிறிய ரக விமானத்தை பயன்படுத்தி அந்தப் பகுதி விவசாய நிலங்களில் மருந்து தெளித்து வந்துள்ளார்.

 

இந்த விமானத்தைக் கொண்டு பொள்ளாச்சியில் தினந்தோறும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் கிருமி நாசினி மருந்து அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ரோபோ ஒன்றை சென்னையை சேர்ந்த இளைஞர் உருவாக்கியுள்ளார். கொளத்தூரில் வசிக்கும் ப்ரேம் 20 கிலோ எடையுள்ள ரோபோவை வடிவமைத்து அதற்கு படி என பெயரிட்டுள்ளார்.

 

செல்போன் செயலி மூலம் இயங்கக்கூடிய இந்த ரோபோ உடலின் தட்பவெப்ப நிலையை கண்டறிந்து தனிமைப்படுத்தப்பட்ட அறையில் நோயாளிகளுக்கு தேவையான கிருமிநாசினி, குடிநீர் போன்றவற்றையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் வீடியோகால் மூலம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் ஆலோசனை பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


Leave a Reply