ஊரடங்கு உத்தரவு : விவசாயப் பணிகளுக்கு தடையில்லை..! விளை பொருட்களை கொள்முதல் செய்யவும் அனுமதி!!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : Arrangement


ஊரடங்கு உத்தரவு காரணமாக விவசாயப் பணிகள் மற்றும் விளைபொருட்களை கொள்முதல் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை தமிழக அரசு நீக்கியுள்ளது. விவசாய கூலிகளும் பணிக்குச் செல்ல தடையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரோனா வைரஸ் முன்னெச்கரிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஒட்டு மொத்த தொழில்களும் முடங்கியுள்ளன. மக்கள் வெளியில் நடமாடவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவால் கிராமப்புறங்களில் விவசாயப் பணிகளும் முடங்கின. விவசாய கூலித் தொழிலாளர்களும் பணிக்குச் செல்வதும் தடைபட்டது. மேலும் விவசாயிகள் விளைவித்த நெல், தானியங்கள் உள்ளிட்டவற்றை அரசு கொள்முதலுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்ததால் விவசாயிகள் நிலையைும் பரிதாபத்துக்கு ஆளானது. ஏற்கனவே போக்குவரத்து தடைபட்டதால் காய்கறி உள்ளிட்ட தினசரி விளை பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்வதிலும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியிருந்தனர்.

 

இந்த நிலையில், விவசாயப் பணிகள் மற்றும் விவசாய கூலிப்பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.விவசாயம் மற்றும் தோட்டக்கலை சார்ந்த இயந்திரங்களின் இயக்கத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் விவசாயப் பொருட்கள் கொள்முதலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.


Leave a Reply