கமுதி அருகே தனியார் கல்லூரியில் வெளி மாவட்டத்தினரை தங்க வைக்க எதிர்ப்பு..! பொது மக்கள் சாலை மறியலால் பரபரப்பு!!

Publish by: கே.மகேந்திரன் --- Photo :


இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கல்லூரி ஒன்றில் தங்க வைக்க வெளியூர்களில் இருந்து 150 பேரை பேருந்துகளில் அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

ஊட்டி, மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து, மூன்று அரசு பேருந்துகளில் சுமார் 150 -க்கும் மேற்பட்ட நபர்களை மூன்று பேருந்துகளில் ஏற்றிக் கொண்டு, இராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா, பசும்பொன் அருகில் உள்ள மார்னிங் ஸ்டார் கலைக்கல்லூரியில் தங்கவைக்க அழைத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதை அறிந்த இப்பகுதி கிராம பொதுமக்கள் எதற்காக இத்தனை நபர்களை கமுதிக்கு வரவழைத்து இருக்கிறீர்கள். இதில் ஏதோ திட்டமிட்ட சதி இருப்பதாக கூறி சாலை மறியல் செய்தனர்.

 

மேலும் கல்லூரிக்குள் அனுமதிக்க மாட்டோம் என சாலைமறியலில் ஈடுபட்டதால் பல மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது .பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் பரமக்குடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


Leave a Reply