கோவையில் வட மாநில தொழிலாளர்கள் உணவு, தங்கும் இடம், மருத்துவ வசதி கோரி சாலை மறியல்..!கலைய மறுத்ததால் போலீசார் தடியடி – பரபரப்பு!!!

Publish by: கோவை- விஜயகுமார் --- Photo :


நாடு முழுவதும் 144 தடை உத்தரவு உள்ள நிலையில் கோவை சுந்தராபுரம் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.

 

கோவை சுந்தராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் தங்கி கூலி வேலை பார்த்து வருகின்றனர்.144 தடை உத்தரவால் அத்தியாவசிய பொருட்களான பால்,மளிகை,காய்கறி கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் தொழிலாளர்களுக்கு உணவு, தங்கும் இடம், மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை செய்து தரக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் சுந்தராபுரம் பகுதியில் திடீரென சாலையில் கூடி மறியலில் ஈடுபட்டனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

 

சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி கலைய உத்தரவிட்டனர். ஆனால்,தொடர்ந்து கலைய மறுத்ததால் போலீசார் லேசான தடியடி நடத்தி வட மாநில தொழிலாளர்களை கலைந்து போக செய்தனர்.144 தடை உத்தரவினை மீறி ஒரே இடத்தில் 100 க்கும் மேற்பட்ட வட மாநிலத்தினர் மறியலில் ஈடுபட்டதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Leave a Reply