லாரியும், டாடா சுமோவும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து

நாமக்கல் மாவட்டம் சின்ன வேப்ப நத்தம் பகுதியில் லாரியும் டாடா சுமோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் வந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். செங்கற்களை ஏற்றிக்கொண்டு லாரி சேலத்தில் இருந்து திருச்சிக்கு சென்ற போது பாதி வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடல்களை மீட்டு மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த 6 பேரில் இருவர் நாமங்களையும் மற்ற நான்கு பேர் பீகாரை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

 

விபத்திற்கான காரணம் சரியாக தெரியாத நிலையில் ஓட்டுநர்கள் தூக்கக்கலக்கத்தில் வாகனம் ஓட்டியது கூட காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.மேலும் தப்பி சென்ற லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.


Leave a Reply