பஸ் டே கொண்டாட்டம்.. மாணவர்கள் அட்டகாசம்..! மக்கள் அவதி!

சென்னையில் அரசு பள்ளி மாணவர்கள் பேருந்தை நிறுத்தி மீண்டும் அட்டகாசம் செய்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்தூரில் இருந்து கோவூர் செல்லும் அரசு பேருந்து தடமென் 88எம் என்ற பேருந்து நேற்று முன்தினம் புறப்பட்டது.

 

அப்போது கோவூர் சோமசுந்தரம் செட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் பஸ்டே என்ற பெயரில் பேருந்தை வழிமறித்து சாலையில் இறங்கி ஆட்டம் போட்டனர். அப்போது சில மாணவர்கள் பேருந்தில் ஜன்னலை பிடித்து தொங்கிய படியே மேற்கூரையில் ஏறி ஆட்டம் போட்டனர்.

 

இன்னும் சிலரோ ஒருபடி மேலே சென்று பேருந்தின் முன்பாக தாரை தப்பட்டை அடித்துக் கொண்டே சென்றனர். மாணவர்களின் இத்தகைய நடவடிக்கையால் பேருந்தில் சென்ற ஏனைய பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.


Leave a Reply