சிறுமியை கொன்ற சிறுத்தையை வேட்டையாடிய உ.பி. கிராம மக்கள்…!

உத்தரபிரதேசத்தில் சிறுமியைக் கொன்ற சிறுத்தையை கிராம மக்களே அடித்துக் கொன்றனர். பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுத்தை பள்ளிக்கு சென்று கொண்டிருந்த சிறுமியை தாக்கிக் கொன்றது. இதில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வனப்பகுதியில் பதுங்கி இருந்த சிறுத்தையை பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொன்றனர்.

 

மேற்கு வங்கம் வாங்குரா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வங்கப்புலியின் கால் தடம் கிடைத்துள்ளது. இதனால் அச்சமடைந்து இருக்கும் அந்த கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அந்த கிராமத்தில் கிடைத்திருக்கும் அந்த கால்தடம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் வனத்துறையினர் இதுவரை கண்டிராத அளவில் மிகப்பெரிய கால்தடம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்பு துறையினர் 5 மணி நேரத்திற்கு மேல் போராடி பத்திரமாக மீட்டனர். குடிகுளம் கிராமத்தில் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் வளர்த்து வரும் பசுமாடு வயல்வெளியில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்தது.

 

அப்போது எதிர்பாராத விதமாக அங்கு இருந்த தரை கிணற்றில் பசு தவறி விழுந்தது. நீண்ட நேரமாக பசு தண்ணீரில் தத்தளித்த நிலையில் அதை பார்த்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பசுவை கயிறு கட்டி பத்திரமாக மேலெழுப்பி வந்தனர்.


Leave a Reply