கோவை அடுத்த சாய்பாபா காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எருக்கம்பெனி பகுதியில் செயல்பட்டுவரும் பிரபல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்ததாக எழுந்த புகாரில், ஆதாரங்களை சேமித்து வைத்த பெண்ணின் கணவரை நிர்வாக தரப்பினர் தாக்கியதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கண்ணப்பநகர் பகுதியை சேர்ந்த தம்பதிகள் மணிகண்டன் (35) மற்றும் சவிதா(30). இவர்கள் எருக்கம்பெனி பகுதியில் உள்ள (ரூட்ஸ்) பிரபல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சவிதா தாங்கள் பணி புரிந்து வரும் பெட்ரோல் பங்கில் உள்ள அறையில் உடைமாற்றி கொண்டிருந்தார். அப்போது,அவருக்கு ரகசியமாக வீடியோ எடுப்பது போன்று தெரிந்துள்ளது. இதனையடுத்து அவர் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர்,கணவர் மணிகண்டன் சந்தேகத்துக்குரிய நபரான சூப்பர்வைசர் சுபாஸ் மீது நிர்வாகத் தரப்பில் புகார் தெரிவித்தார். இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு பின்பு சமரசம் செய்யப்பட்டது. அதேசமயம், ரகசியமாக உடைமாற்றும் அறையில் கேமராவை வைப்பதையும், ரெக்கார்ட் செய்த வீடியோக்களையும் சவிதாவின் கணவர் மணிகண்டன் ஆதாரமாக சேமித்து வைத்திருப்பது நிர்வாக தரப்புக்கு தெரியவந்தது.
இதையடுத்து மணிகண்டன் வைத்துள்ள ஆதார வீடியோக்களை அழிக்கும் படி நிர்வாகத் தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மணிகண்டன் வீடியோவை அழிக்க மறுத்ததால் நிர்வாக தரப்பினரால் கொடூரமாக தாக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மணிகண்டன் கூறுகையில், சூப்பர்வைசர் ரகசியமாக எடுத்த வீடியோக்களை நான் ஒரு ஆதாரத்திற்காக சேமித்து வைத்திருந்தேன். ஆனால்,இன்று என்னிடம் ஆதாரம் இருப்பதை அறிந்த நிர்வாக இயக்குனர் கவிதாசன், மக்கள் தொடர்பாளர் சரவணன், மேலாளர் சங்கர் கணேஷ் மற்றும் சிலர் கடுமையாக தாக்கினர். இதைத்தொடர்ந்து நான் பெட்ரோல் திருடியதாகவும் பொய்யான புகார் அளித்துள்ளனர் என தெரிவித்தார்.
கோவை அடுத்த சாய்பாபா காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எருக்கம்பெனி பகுதியில் செயல்பட்டுவரும் பிரபல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்ததாக எழுந்த புகாரில், ஆதாரங்களை சேமித்து வைத்த பெண்ணின் கணவரை நிர்வாக தரப்பினர் தாக்கிய சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.