தமிழக முதல்வர் குறித்து அவதூறு !கோவை வாலிபர் கைது !

தமிழக முதல்வர் பற்றி அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய கோவை வாலிபரை குனியமுத்தூர் போலீஸார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை கரும்புக்கடை சேரன் நகர் பகுதியை சேர்ந்த சிராஜுதீன் என்பவர் சமூக ஊடகங்கள் மூலம் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களையும், மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்,ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களை ஆபாசமாகவும், தரக்குறைவான முறையிலும் செய்திகளை பரப்புவதாக வந்த தகவல்களை அடுத்து குனியமுத்தூர் போலிசார் வழக்கு பதிவு செய்து சிராஜ்தீனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது,அவர் வேண்டுமென்றே அவதூறு பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் இளைஞரை கைது செய்தனர்.

 

விசாரணையில் அவர் தமிழ்நாடு மக்கள் ஜனநாயக கட்சியின் கோவை மத்திய மண்டல செயலாளர் என்பது தெரியவந்தது., மேலும்,இவரது முகநூல் பக்கத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஏராளமான பதிவுகள் செய்துள்ளதை போலிசார் உறுதிசெய்துள்ளனர். இது தவிர கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் தகராறு செய்தது, மற்றும் கொலைமிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் போத்தனூர் காவல் நிலையத்தில் உள்ளது என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சிராஜ்தீனை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Leave a Reply